Cooking Recipes in Tamil (veg)

சமையல்: பனீர் வெஜ் மின்ட் கறி

 
Panner Veg Mint Curry - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்

வதக்கி அரைக்க
புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு


செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

சமையல்: பஞ்சாபி கரம் மசாலா பொடி

 
Punjabi Garam Masala Powder - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:

பட்டை - அரை பங்கு
லவங்கம் - அரை பங்கு
ஜாதிக்காய் - எண்ணிக்கையில் 4
ஏலக்காய் - 4 பங்கு
சீரகம் - ஒரு பங்கு
சோம்பு - 10 கிராம்
பிரிஞ்சி இலை - 5-6
மல்லி - அரை பங்கு
மிளகு - அரை பங்கு
கிராம்பு - அரை பங்கு
கல் உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

* இவை எல்லாவற்றையுமே தனித் தனியாக வெயிலில் உலர்த்திக் கொண்டு, மிக்சியிலேயே தனித் தனியாக பொடிக்கவும். நல்ல நைசாக பொடித்து வைக்கவும்.

* சிலர் இதிலேயே சுக்கு / இஞ்சியும் சேர்க்கிறார்கள். தேவையில்லை.. சமைக்கும் போது அரைத்து விட்ட இஞ்சியை சேர்த்துக் கொண்டால் போதும்.. இந்த கரம் மசாலா பொடியில் சேர்க்க தேவையில்லை.

சமையல்: ஹோம்  மேட் சாக்லேட்

 
Home Made Chocolate - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் பார் - 1
பிரவுன் சாக்லேட் பார் - 1
முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது

செய்முறை:
* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.
* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.
* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.

* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு : கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.

No comments:

Post a Comment