Cooking recipes in tamil (non-veg)

மட்டன் மசாலா :

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 தேக்கரண்டி
கிராம்பு தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு அதனுடன் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, வெண்ணெய் போட்டு உருகச் செய்ய வேண்டும். அதனுடன் பட்டை, கிராம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத் தூள், சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வேக வைத்த கறியை இதில் கொட்டி, நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதைப் பரிமாறலாம்.
 
 
மட்டன் கட்லெட்

  தேவையான பொருட்கள் :
  
ஆட்டுக்கறி: ஒரு கிலோ
 கரம் மசாலா: 2 தேக்கரண்டி
 தனியா தூள் 2 தேக்கரண்டி
 நெய்: 200 கிராம்
 சுக்கு: 1 தேக்கரண்டி
 பெரிய வெங்காயம்: 2
பெருங்காயத் தூள்: ஒரு சிட்டிகை
 இஞ்சி: சிறுதுண்டு
 கொத்துமல்லி: ஒரு கட்டு
 உருளைக்கிழங்கு: 14
பச்சை மிளகாய்: 2
உப்பு: தேவையான அளவு
ரொட்டித் தூள்: தேவையான அளவு

செய்முறை  :

                   வாணலியில் 50  கிராம் நெய் விட்டு,  அது  காய்ந்ததும் உருளைக்கிழங்கு,  ரொட்டித்  தூள்  தவிர  ஏனைய  பொருள்களை எல்லாம் வாணலியில்  போட்டு  வதக்க  வேண்டும்.  தேவையான அளவு  தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்க வேண்டும்.

          உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்க வேண்டும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். 


மட்டன் போப்ளா

தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ
சிவப்பு பூசணி (போப்ளா) - கால் கிலோ
பச்சைமிளகாய் - 2
தயிர் - அரை கப்
வெங்காயம் - 150 கிராம்
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பிரிஞ்சி இலை - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
             ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டங்களை தயிரில் சுமார் ஒரு மணிநேரம் ஊறவிட வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடியைச் சேர்க்க வேண்டும்.

                பிரிஞ்சி இலை, முழு பச்சைமிளகாய் மற்றும் தயிரில் ஊறிய மட்டன் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். மட்டன் நன்கு சிவக்கும் வரை வேகவைத்து பிறகு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேகவிட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பூசணிக்காயைத் தோல் செதுக்கி வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்து வைத்துள்ள பூசணிக்காயை வெந்துகொண்டிருக்கும் கறியுடன் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியாகி வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.
 
 பட்டர் சிக்கன்
 
Butter Chicken - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்(துருவியது)
பூண்டு  - 3
பல்லாரி - 2
தக்காளி - 3
சின்ன வெங்காயம் - 5
மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் - டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா - 10 இலைகள்
மல்லித்தழை - 1 கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.

* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல்லாரியை சிக்கனுடன் சேர்த்து குக்கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வைத்தால் தண்ணீ­ர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.)

* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.

* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.

* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடிபிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி
 

 

No comments:

Post a Comment